Posts

Image
எதற்கு ''மே" தினம்                                                                                                                                              மள்ளர் சுவாமிநாதன் கழனியெங்கும்  ஓடிய   நீரையெல்லாம்   கானல் நீராக்கிவிட்டாய்  தெளிந்தோடிய நீரோடையெங்கும்  தொண்டை வற்ற செய்துவிட்டாய்  மண்ணை தோண்டி   மழை நீரை தேக்கசொன்னால் -நீ  மணலை தோண்டி பாவத்தை -உன்  மடியிலே கட்டுகின்றாய்  மள்ளர்களின் நல்வாழ்வுதனில்  மண்ணள்ளி போட்டுவிட்டு மமதையாய் எங்களை  பார்க்கின்றாய்  முப்போகம் கண்ட தேவேந்திரனை   முகம் சுழிக்க செய்துவிட்டாய்  வானம் கூட அழுவதில்லை இவன் மனம் சிரிக்க  ஒரு வார்த்தை கூட வருவதில்லை இவன் முகம்  மலர  அதிகாரம் உள்ளதென்ற மமதையில்  ஆணவமாய் அலைகின்றாய்- மள்ளனை அழித்தொழிக்க துணிந்து நீயும்  அகந்தையோடு நிற்கின்றாய் -ஆனால்  அழிவது நாங்களில்லைமூடனே ! அழிந்து போவது நீதான் திருடனே .... இங்கே நிலைமை இப்படியிருக்க  எதற்கு எங்களுக்கு "மே'' தினம் ?